வேகமெடுக்கும் தனுஷின் கேப்டன் மில்லர் படப்பிடிப்பு… ட்ரண்டாகும் புது ஷூட்டிங் ஸ்பாட் GLIMPSE இதோ!

தனுஷின் கேப்டன் மில்லர் பட புது ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்,dhanush in captain miller movie shooting spot photo shared by arun madheswaran | Galatta

தன்னிகரற்ற நடிகராக தன்னைத்தானே செதுக்கி தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகராக உயர்ந்து, இந்திய சினிமாவின் மிக முக்கிய நடிகராக முத்திரை பதித்து தற்போது ஹாலிவுட்டிலும் கலக்கி வரும் நடிகர் தனுஷ் கடைசியாக, அவெஞ்சர்ஸ் எண்டு கேம் பட இயக்குனர்கள் ரூசோ சகோதரர்கள் இயக்கத்தில் பிரம்மாண்டமான ஆக்சன் படமாக கடந்த 2022ம் ஆண்டு வெளிவந்த தி க்ரே மேன் திரைப்படத்தில் மிரட்டலான அதிரடி கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார். முன்னதாக தனுஷ் நடிப்பில் உருவான மாறன் திரைப்படம் நேரடியாக Disney+ Hotstar தளத்தில் வெளியாக, அடுத்து வெளிவந்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் அனைத்து வயது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. தொடர்ந்து இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த நானே வருவேன் திரைப்படமும் சூப்பர் ஹிட் ஆனது

அந்த வகையில், இந்த 2023ம் ஆண்டில் முதல் படமாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படம் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது. அடுத்ததாக தேசிய விருது பெற்ற பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் புதிய படத்தில் தனுஷ் நடிக்கிறார். தமிழ் , தெலுங்கு & ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் இந்த புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2022 நவம்பர் 28ஆம் தேதி பூஜையோடு தொடங்கப்பட்டது.

இதனிடையே தனது திரைப்பயணத்தில் அடுத்த மைல் கல்லாக தனுஷ் தனது 50வது படத்தில் நடிக்க இருக்கிறார். தனுஷின் இந்த 50 திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ராக்கி மற்றும் சாணிக் காயிதம் திரைப்படங்களின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்திலும் தனுஷ் நடித்து வருகிறார். 1930-களில் நடைபெறும் கதைக்களத்தை கொண்ட கேப்டன் மில்லர் திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தனுஷுடன் இணைந்து பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க, சந்தீப் கிஷன் முன்னணி வேடத்தில் நடிக்கிறார். மேலும் கன்னட நடிகர் சிவராஜ்குமார், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கென், இளங்கோ குமரவேல் ஆகியோர் கேப்டன் மில்லர் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் நாகூரான் படத்தொகுப்பு செய்யும் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  தனக்கென தனி பாணியில் மிரட்டலான அதேசமயம் உணர்ச்சிபூர்வமான திரைப்படங்களை கொடுத்து வரும் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் அதிரடியான பீரியட் ஆக்சன் திரைப்படமாக தயாராகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் அதிரடியான மேக்கிங் வீடியோவும் வெளிவந்து ரசிகர்களிடையே ஆர்வத்தை தூண்டி இருக்கும் நிலையில், தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கேப்டன் மில்லர் திரைப்படத்தில் ஸட்ண்ட் இயக்குனர் தில்ப் சுப்பராயனுடன் பணியாற்றி வரும் தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ள இயக்குனர் அருண் மாதேஸ்வரன் "WRITE , SHOOT" எனக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். சோசியல் மீடியாவில் வைரலாகும் அந்த புகைப்படங்கள் இதோ…
 

Write, shoot! pic.twitter.com/uFiWdQDLPv

— Arun Matheswaran (@ArunMatheswaran) February 12, 2023

சொப்பன சுந்தரியாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ்... அசத்தலான புதிய படத்தின் ரிலீஸ் குறித்த ஸ்பெஷல் அறிவிப்பு!
சினிமா

சொப்பன சுந்தரியாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ்... அசத்தலான புதிய படத்தின் ரிலீஸ் குறித்த ஸ்பெஷல் அறிவிப்பு!

தொடரும் தளபதி விஜயின் வாரிசு பட கொண்டாட்டம்... சர்ப்ரைஸாக வந்த ஜிமிக்கி பொண்ணு பாடலின் முழு வீடியோ இதோ!
சினிமா

தொடரும் தளபதி விஜயின் வாரிசு பட கொண்டாட்டம்... சர்ப்ரைஸாக வந்த ஜிமிக்கி பொண்ணு பாடலின் முழு வீடியோ இதோ!

சிலம்பரசன்TRன் வெந்து தணிந்தது காடு படக்குழுவின் காதலர் தின பரிசு… ஆவலோடு காத்திருந்த ரசிகர்களுக்கு ARரஹ்மானின் ட்ரீட் இதோ!
சினிமா

சிலம்பரசன்TRன் வெந்து தணிந்தது காடு படக்குழுவின் காதலர் தின பரிசு… ஆவலோடு காத்திருந்த ரசிகர்களுக்கு ARரஹ்மானின் ட்ரீட் இதோ!