தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தனுஷ்.ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒன்றை ட்ரை செய்து தமிழ் சினிமாவை வேற லெவெலிற்கு எடுத்து செல்லும் சில நடிகர்களில் ஒருவராக தனுஷ் இருக்கிறார்.இவரது நடிப்பில் மாறன் படம் கடைசியாக வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து தனுஷ் தி கிரே மேன்,செல்வராகவன் இயக்கத்தில் வி க்ரியேஷன் தயாரிப்பில் நானே வருவேன்,வெற்றிமாறனுடன் ஒரு படம்,சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் திருச்சிற்றம்பலம்,ஆயிரத்தில் ஒருவன் 2,சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படம் என்று ஒரு தனி லிஸ்டே வைத்துள்ளார் தனுஷ்.

தனுஷ் Netflix தயாரிப்பில் உருவாகும் The Gray Man என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார்.இந்த படத்தினை avengers படத்தினை இயக்கிய Russo Brothers இயக்குகின்றனர்.உலகிலேயே அதிக பட்ஜெட் கொண்ட படமாக இந்த படம் உருவாகி வருகிறது.இந்த படத்தில் பல முன்னணி ஹாலிவுட் நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

தி கிரே மேன் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது.தற்போது இந்த படத்தில் நடிக்கும் தனுஷ் உள்ளிட்ட சில முக்கிய நட்சத்திரங்களின் லுக்களை படக்குழு வெளியிட்டுள்ளனர்.அத்துடன் இந்த படம் ஜூலை 22 ஆம் தேதி நேரடியாக Netflix-ல் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.