இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெகு நாட்களுக்கு பிறகு பெரும் எதிர்பார்ப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் எனை நோக்கி பாயும் தோட்டா. கல்லூரி மாணவராக இருக்கும் தனுஷ்,மேகா ஆகாஷ் எனும் இளம் நடிகையை கல்லூரி படப்பிடிப்பில் சந்திக்கிறார். பார்த்த நொடியே இருவர் மத்தியில் காதல் மலர்கிறது. இதன் நடுவே லேகாவை வைத்து பணம் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் மிதக்கிறார் தயாரிப்பாளர்/இயக்குனர் குபேரன். இவரிடமிருந்து லேகாவை காப்பாற்றும் வேலையில், பிரிந்த தனது சகோதரர் திருவை சந்திக்கிறார் நாயகன். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது தான் இப்படத்தின் கதைச்சுருக்கம். 

meghaakash dhanush

விமர்சன ரீதியாகவும், இளைஞர்கள் மத்தியில் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது இப்படம். வழக்கம் போல் உள்ள கவுதம் மேனனின் பாட்டர்னில் அமைந்தது. பாடல்கள் படத்திற்கு மிகப்பெரிய பலம். பின்னணி இசை மற்றும் பாடல்களில் பட்டையை கிளப்பியுள்ளார் டர்புகா ஷிவா. 

dhanush megha

தற்போது இவரது இசையில் உருவாகிய நான் பிழைப்பேனோ பாடலின் வீடியோ வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. சத்யபிரகாஷ் பாடிய இந்த பாடல் வரிகளை தாமரை எழுதியுள்ளார்.