சிறுநீரக செயலிழப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நடிகர் போண்டா மணி தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நடிகர் போண்டா மணிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 

வைகை புயல் வடிவேலு & சின்ன கலைவாணர் விவேக் என அனைவருடனும் இணைந்து 250க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்த நடிகர் போண்டாமணியை, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியம் அவர்கள்  சமீபத்தில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

மேலும சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு போண்டாமணியின் உறவினர்கள் மூலமாகவோ அல்லது உறுப்பு தான ஆணையத்தின் மூலமாக சிறுநீரகம் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றும் போண்டா மணியின் அனைத்து சிகிச்சைகளும் முதலமைச்சர் அரசு காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்து தரப்படும் என்றும் உறுதி அளித்தார்.

சிகிச்சைப்பெற்று வரும் நடிகர் போண்டாமணியை நேரில் சந்தித்த மனோபாலா நடிகர் சங்கத்தின் சார்பில் நிதி உதவி வழங்கியதையடுத்து, நடிகர் விஜய் சேதுபதி ஒரு லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கினார். இந்நிலையில் நடிகர் தனுஷ், போண்டா மணியின் மருத்துவ சிகிச்சைக்காக ஒரு லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். இதுகுறித்து நடிகர் போண்டாமணி மருத்துவமனையில் இருந்து நடிகர் தனுஷுக்கு நன்றி தெரிவித்து பேசிய வீடியோ தற்போது வெளியானது. அந்த வீடியோ இதோ…
 

உதவிக்கரம் நீட்டிய நடிகர் தனுஷ்-க்கு உருக்கமான நன்றி - நடிகர் போண்டா மணி.#Dhanush @dhanushkraja #BondaMani pic.twitter.com/PYqSrHui8Q

— Galatta Media (@galattadotcom) September 25, 2022