தனுஷ் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான பட்டாஸ் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இதனை தொடர்ந்து பரியேறும் பெருமாள் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார்.

Dhanush D43 With Karthick Naren And GV Prakash

இது தவிர கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இன்னும் மூன்று நாட்கள் ஷூட்டிங் இருக்கிறது என்ற தகவல் கிடைத்திருந்தது.அத்தரங்கி ரே என்ற பாலிவுட் படத்திலும் நடிக்கவுள்ளார்.இவற்றை தவிர ராட்சசன் இயக்குனர் ராம்குமார் இயக்கும் படம்,சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள D44 உள்ளிட்ட படங்களிலும் நடிக்கவிருக்கிறார்.

Dhanush D43 With Karthick Naren And GV Prakash

தற்போது தனுஷ் நடிக்கும் 43ஆவது படத்தை துருவங்கள் பதினாறு,நரகாசூரன்,மாஃபியா உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கவுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இந்த படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கின்றனர்.ஜீ.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படம் அக்டோபர் 2020-ல் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளனர்.