பேட்ட படத்தின் வெற்றியை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் தனது அடுத்த படத்தில் தனுஷுடன் இணைகிறார்.2016-லேயே தொடங்க வேண்டிய இந்த படம் சில காரணங்களால் தள்ளி போனது.Y Not ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர்.

Dhanush D40 Shoot To Be Wrapped By January

D40 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி ஹீரோயினாக நடிக்கிறார்.சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்ககிறார்,இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

Dhanush D40 Shoot To Be Wrapped By January

இந்த படத்தில் கலையரசன்,மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.லண்டனில் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தான் மற்றும் ஜெய்சால்மர் ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது.

Dhanush D40 Shoot To Be Wrapped By January

தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் டிசம்பர் 24ஆம் தேதி வரை இந்த படப்பிடிப்பு நிறைவடையும் என்றும் ஜனவரியில் 3 நாட்கள் படப்பிடிப்பு உள்ளது அத்துடன் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடையும் என்றும் படத்தின் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

Dhanush D40 Shoot To Be Wrapped By January