இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் D40. ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். 

dhanush

லண்டன், சென்னை, மதுரை போன்ற பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. தனுஷ் கிடா மீசையில் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ சமீபத்தில் வெளியாகி அசத்தியது. பிளாஷ்பாக் காட்சியில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை சஞ்சனா நட்ராஜன் நடிக்கிறார் என்ற தகவலும் தெரியவந்தது. சுருளி என்ற பாத்திரத்தில் தனுஷ் நடிப்பதால் இதன் டைட்டில் சுருளி என்று கூறப்படுகிறது. 

Dhanush Dhanush

தற்போது படத்தின் முதல் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் பதிவு செய்துள்ளது. இன்னும் மூன்று நாட்கள் கொண்ட படப்பிடிப்பு மட்டுமே உள்ளது எனவும் தெரிவித்தனர். இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் படக்குழுவினர்.