தனுஷ் தற்போது பரியேறும் பெருமாள் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார்.இது தவிர கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இன்னும் மூன்று நாட்கள் ஷூட்டிங் இருக்கிறது என்ற தகவல் கிடைத்திருந்தது.

Dhanush D 43 Prasanna Joins Cast Karthick Naren

அத்தரங்கி ரே என்ற பாலிவுட் படம்,ராட்சசன் இயக்குனர் ராம்குமார் இயக்கும் படம்,சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள D44 உள்ளிட்ட படங்களிலும் நடிக்கவிருக்கிறார்.சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகவுள்ள D 43 படத்தில் அடுத்ததாக நடிக்கவுள்ளார்.

Dhanush D 43 Prasanna Joins Cast Karthick Naren

இந்த படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.இந்த படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தில் பிரசன்னா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவலை கலாட்டாவுடனான பிரத்யேக நேர்காணலில் கார்த்திக் நரேன் தெரிவித்துள்ளார்.

Dhanush D 43 Prasanna Joins Cast Karthick Naren

தனுஷை எப்படி சந்தித்து கதை சொன்னார் என்பதை விவரித்த கார்த்திக் நரேன்.இந்த படத்தில் பிரசன்னாவும் நடிக்கிறார் என்பதனை கூறியிருக்கிறார்.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.