தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தனுஷ்.ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒன்றை ட்ரை செய்து தமிழ் சினிமாவை வேற லெவெலிற்கு எடுத்து செல்லும் சில நடிகர்களில் ஒருவராக தனுஷ் இருக்கிறார்.இவரது நடிப்பில் தி கிரே மேன் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் வி க்ரியேஷன் தயாரிப்பில் நானே வருவேன்,வெற்றிமாறனுடன் ஒரு படம்,சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் திருச்சிற்றம்பலம்,ஆயிரத்தில் ஒருவன் 2,சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படம்,வாத்தி என்று ஒரு தனி லிஸ்டே வைத்துள்ளார் தனுஷ்.

தி கிரே மேன் படத்தினை நெட்பிளிக்ஸ் தயாரித்துள்ளனர்.avengers படத்தினை இயக்கிய Russo Brothers இந்த படத்தினை இயக்கியிருந்தனர்.உலகிலேயே அதிக பட்ஜெட் கொண்ட படமான இந்த படத்தில் Chris Evans,Ryan Gosling உள்ளிட்ட பல முன்னணி ஹாலிவுட் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.தி கிரே மேன் ஜூலை 22 ஆம் தேதி நேரடியாக Netflix-ல் வெளியாகியுள்ளது.

அதிரடி ஆக்ஷன் படமாக ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்று வரும் இந்த படத்தின் அடுத்த பாகம் தயாராகவுள்ளது என்ற தகவலை சில நாட்களுக்கு முன் படத்தின் இயக்குனர்கள் பகிர்ந்து கொண்டனர்.தற்போது தனுஷ் அடுத்த பாகத்தில் நடிப்பதை உறுதி செய்வதுபோல ஒரு வாய்ஸ் நோட் ஒன்றை பகிர்ந்துள்ளார்.தி கிரே மேன் படத்தின் அடுத்த பாகத்திலும் தனுஷ் நடிக்கவுள்ளதால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.