பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 53. பெருங்குடல் நோய் தொற்று காரணமாக மும்பையில் உள்ள கோகிலாபென் திருப்பாய் அம்பானி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி காலமானார். 

Irfan Khan

தற்போது நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், இச்செய்தியை கேட்டு மனம் உடைந்தது. அவர் திறமையான கலைஞர். நல்ல மனிதரை இழந்து விட்டோம். எப்பொழுதும் அவரது கனிவான வார்த்தைகளை நியாபகம் வைத்திருப்பேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள் என்று பதிவு செய்துள்ளார். 

Dhanush

இவர் நடித்த ஸ்லம் டாக் மில்லினர், லைஃப் ஆஃப் பை, ஜுராஸிக் வேர்ல்ட், அமேசிங் ஸ்பைடர் மேன் போன்ற ஹாலிவுட் படங்கள் ரசிகர்களின் ஃபேவரைட். கடைசியாக அங்கிரேஜி மீடியம் எனும் பாலிவுட் படத்தில் நடித்திருந்தார். அவரது மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.