தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தனுஷ்.ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒன்றை ட்ரை செய்து தமிழ் சினிமாவை வேற லெவெலிற்கு எடுத்து செல்லும் சில நடிகர்களில் ஒருவராக தனுஷ் இருக்கிறார்.கடைசியாக இவரது திருச்சிற்றம்பலம் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது

இதனை தொடர்ந்து தனுஷ் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன்,வெற்றிமாறனுடன் ஒரு படம்,ஆயிரத்தில் ஒருவன் 2,சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படம்,வாத்தி,கேப்டன் மில்லர் என்று ஒரு தனி லிஸ்டே வைத்துள்ளார் தனுஷ்.இவரது நானே வருவேன் படம் வரும் செப்டம்பர் 29ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

கேப்டன் மில்லர் படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கின்றனர்.இந்த படத்தினை ராக்கி,சாணிக்காயிதம் பட இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார்.ஜீ வி பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.ப்ரியங்கா மோகன் இந்த படத்தின் ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.

சந்தீப் கிஷன்,நிவேதிதா சதிஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.இந்த படத்தின் பூஜை சில நாட்களுக்கு முன் நடைபெற்றது.தற்போது இந்த படத்தின் பூஜை வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்