துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் நடிகனாக அறிமுகமாகி தனது தோற்றத்திற்காக உருவ கேலி செய்யப்பட்ட ஒரு நடிகர் இன்று ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் கொண்டாடும் ஆகச் சிறந்த நடிகனாக மாறியிருக்கிறார் என்றால் அவர்தான் நடிகர் தனுஷ். நடிகர் தனுஷ் தற்போது ஒரு புதிய சாதனையை படைத்திருக்கிறார்.

 இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன, இயக்குனர் வெற்றிமாறனின் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என நடிப்பில் தான் ஒரு தேர்ந்த கலைஞன் என்பதை ஒவ்வொரு முறையும் நிரூபித்து வரும் நடிகர் தனுஷ் கடைசியாக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளிவந்த ஜகமே தந்திரம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

கமர்சியலாக திருடா திருடி, திருவிளையாடல், மாரி என கலக்கும் தனுஷ் கர்ணன் மாதிரியான படங்களின் மூலம் நம்மை கலங்கடிக்கும் செய்வார். அடுத்ததாக இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் D43 படத்தில் நடித்து வருகிறார். மேலும் தனுஷ் நடித்த அற்றங்கி ரே மற்றும் தி க்ரே மேன் ஆகியோர் திரைப்படங்களும் அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் தனுஷ் தற்போது ட்விட்டரில் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார். தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை அமைத்திருக்கும் நடிகர் தனுஷின் ட்விட்டர் பக்கத்தில் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை தற்போது கோடியை தாண்டியுள்ளது. 10 மில்லியன் ஃபாலோலர்களை கடந்த முதல் கோலிவுட் ஹீரோ எனும் சாதனையை தற்போது படைத்திருக்கிறார். இந்த சாதனை தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.