பட்டாஸ் படத்தின் ரிலீஸை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜுடன் கர்ணன் படத்தில் பணிபுரிந்து வருகிறார் தனுஷ். மேலும் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கவிருக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். 

atrangire

கடந்த 2013-ம் ஆண்டு ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ராஞ்சனா என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்தார் தனுஷ். பிறகு பால்கி இயக்கத்தில் அமிதாப் பச்சனுடன் ஷமிதாப் என்ற படத்தில்  நடித்தார். தற்போது மீண்டும் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் அத்ரங்கி ரே நடிக்கவிருக்கிறார். இதில் தனுஷுடன் அக்‌ஷைகுமார் மற்றும் சாரா அலிகான் நடிக்கின்றனர். 

atrangi re

ஹிமான்ஷு ஷர்மா கதை எழுதியுள்ளார். சமீபத்தில் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரையில் துவங்கவுள்ளதாக செய்தி வெளியானது.