“கில்லர்.. கில்லர்.. கேப்டன் மில்லர்!” பட மிரட்டலான லுக்கில் வந்த தனுஷ்... சோசியல் மீடியாவை அதிரவிடும் ட்ரெண்டிங் வீடியோ இதோ!

கேப்டன் மில்லர் பட லுக்கில் வந்த தனுஷின் வீடியோ,dhanush arrives in mumbai with stunning new look from captain miller | Galatta

பாகஸ் ஆஃபிஸில் 100 கோடி வசூலித்த வாத்தி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் தெலுங்கு - தமிழ் இரு மொழிகளில் உருவாகும் புதிய திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். தேசிய விருது பெற்ற பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் தமிழ் , தெலுங்கு & ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் புதிய படத்தில் தனுஷ் நடிக்கிறார். இந்த புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் பூஜையோடு தொடங்கப்பட்டது. முன்னதாக ரசிகர்களின் ஃபேவரட் கூட்டணியான தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் விரைவில் உருவாக இருக்கும் வடசென்னை 2 படத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். விடுதலை பாகம் 2 ரிலீசுக்கு பிறகு நடிகர் சூர்யாவின் வாடிவாசல் திரைப்படத்தை இயக்க இருக்கும் இயக்குனர் வெற்றிமாறன், அதற்கு பிறது வடசென்னை 2 படத்தை இயக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே தனுஷ் நடிப்பில் அடுத்த அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக தயாராகி வரும் திரைப்படம் தான் கேப்டன் மில்லர். ராக்கி மற்றும் சாணிக் காயிதம் என தனக்கென தனி பாணியில் மிரட்டலான ஆக்சன் படங்களை கொடுத்து வரும் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 1930-களில் நடைபெறும் கதைக்களத்தை கொண்ட  ஆக்சன் படமாக தயாராகும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தென்காசியில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் அடிவாரத்தில் நடைபெற்றது. அந்த படப்பிடிப்பில் குண்டு வெடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டதால் வன உயிர்களுக்கும் காடுகளுக்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் படப்பிடிப்பு நடைபெறுவதாகவும் உரிய அனுமதி இன்றி படப்பிடிப்பு நடைபெறுவதாகவும் புகார் அளித்த நிலையில், மாண்புமிகு தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் அவர்கள், இது குறித்து விசாரணை நடத்தப்படும் என தெரிவித்திருந்தார். இதனை அடுத்து கடந்த சில வாரங்களாக மதுரையில் நடைபெற்று வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பும் உரிய அனுமதி பெறாமல் வனப்பகுதியில் நடத்தப்படுவதாக புகார்கள் எழுந்தது. இது குறித்தும் தகுந்த விசாரணை செய்யப்படும் என மாண்புமிகு வனத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷுடன் இணைந்து பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க, சந்தீப் கிஷன் முன்னணி வேடத்தில் நடிக்கிறார். மேலும் கன்னட நடிகர் சிவராஜ்குமார், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கென், இளங்கோ குமரவேல், பிரபல ஹாலிவுட் நடிகர் எட்வர்ட் சொன்னேன்பிலிக் ஆகியோர் கேப்டன் மில்லர் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் நாகூரான் படத்தொகுப்பு செய்யும் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஜூன் மாதத்திலும், டீசர் வரும் ஜூலை மாதத்திலும் வெளியாகும் என படக் குழுவினர் அறிவித்துள்ளனர். எனவே இது குறித்த இதர அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில் மும்பையில் மிரட்டலான கேப்டன் மில்லர் திரைப்படத்தின் லுக்கில் வந்த தனுஷின் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளன. ட்ரெண்டாகும் அந்த வீடியோ இதோ…
 

'நயன்தாராவை வைத்து ROMANTIC SCENE எடுக்கும் போது..!'- இருவரில் யார் POSSESSIVE என்ற கேள்விக்கு விக்னேஷ் சிவனின் செம்ம பதில்! வீடியோ இதோ
சினிமா

'நயன்தாராவை வைத்து ROMANTIC SCENE எடுக்கும் போது..!'- இருவரில் யார் POSSESSIVE என்ற கேள்விக்கு விக்னேஷ் சிவனின் செம்ம பதில்! வீடியோ இதோ

நயன்தாராவை காதலிக்க ஆரம்பித்த தருணம்... முதல் முறை விக்னேஷ் சிவன் பகிர்ந்த நானும் ரவுடிதான் நினைவுகள்! வைரல் வீடியோ
சினிமா

நயன்தாராவை காதலிக்க ஆரம்பித்த தருணம்... முதல் முறை விக்னேஷ் சிவன் பகிர்ந்த நானும் ரவுடிதான் நினைவுகள்! வைரல் வீடியோ

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் அடுத்த ஸ்பெஷல் ட்ரீட்
சினிமா

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் அடுத்த ஸ்பெஷல் ட்ரீட் "வீரன் திருவிழா"... ரசிகர்கள் கொண்டாடும் அட்டகாசமான GLIMPSE இதோ!