இந்திய திரை உலகமே வியந்து பார்க்கும் கலைஞராக கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து மக்களை மகிழ்வித்து வரும் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக பலி வந்த விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. கமல்ஹாசனின் தீவிர ரசிகரான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் ஆல் டைம் ரெகார்ட்பாக பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்தது.

தற்போது பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் கமல்ஹாசன் நடித்து வருகிறார். இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே நாயகன் திரைப்படத்திற்கு பின் 35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் புதிய KH234 படத்தில் நடிக்கவுள்ளதாக அட்டகாசமான அறிவிப்பு வெளியானது.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் , ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து வழங்கும் KH234 திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். அடுத்த ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது. இந்நிலையில் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களை சமீபத்தில் சந்தித்த பிரபல தயாரிப்பாளர் தனஜெயன் அவர்கள் KH234 சுவாரஸ்ய தகவல்களை நமது கலாட்டா சேனல்கள் அளித்த பிரத்யேக பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.

இந்த பேட்டியில், "கமல்ஹாசன் அவர்களை நேரில் சந்தித்தபோது நிறைய விஷயங்களை பேசினோம். குறிப்பாக இயக்குனர் மணிரத்னம் உடன் மீண்டும் இணையும் KH234 திரை வரலாற்றிலேயே பென்ச்மார்க் திரைப்படமாக இருக்கும்…” என தெரிவித்தார். மேலும் கேங்ஸ்டர் படமா அல்லது என்ன மாதிரியான படம்? என கேட்டபோது, “என்ன மாதிரியான படம் என்பது குறித்து எல்லாம் நாங்கள் பேசவில்லை. ஆனால் கமல்ஹாசன் அவர்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறார். கட்டாயமாக இந்திய திரை வரலாற்றிலேயே மிகப்பெரிய பிளாக் மாஸ்டர் படமாக இப்படம் அமையும்” என தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் தனஜெயன் அவர்களின் முழு பேட்டி இதோ…