கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் கடும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சில மாநிலங்கள் அத்தியாசவசிய தேவைகளுக்கான சேவைகளை தவிர மற்ற அனைத்து சேவைகளை முடக்கியுள்ளன. பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின்படி சுய ஊரடங்கு 100% அனுசரிக்கப்பட்டது. மக்களுக்காக சேவையாற்ற மருத்துவத்துறை காவல்துறை மற்றும் சுகாதார பணியில் ஈடுபட்டோருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கைத்தட்டி நாடு முழுவதும் உள்ள பொது மக்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் தங்கள் நன்றியை வெளிப்படுத்தினர்.

Devisriprasad

தற்போது இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் அவரது ஸ்டைலில் டிரம்ஸ் வாசித்து, கைத்தட்டி தனது நன்றியை வெளிப்படுத்தியுள்ளார். இந்த தருணத்தில் அயராது வேலை பார்க்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் அனைவர்க்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்தார். 

Devisriprasad

தெலுங்கில் பிஸியாக இருக்கும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், மகேஷ் பாபு நடித்து ஹிட்டான சரிலேறு நீக்கெவ்வரு படத்திற்கு இசையமைத்திருந்தார். தமிழில் கடைசியாக சியான் விக்ரம் நடித்த சாமி 2 திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.