ஏ.ஜி.எஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிப்பில், இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தீபாவளி விருந்தாய் வெளியாகியுள்ள படம் பிகில். இந்தப் படத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். விமர்சன ரீதியாகக் கலவையாகவே உள்ளது. இதனைத் தொடர்ந்து பிகில் படக்குழுவினருக்கு பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

bigil

இந்நிலையில் பிகில் படத்தில் தளபதி விஜய்க்கு அக்காவாக நடித்த தேவதர்ஷினி படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்தும், தளபதி விஜய் குறித்தும் நம் கலாட்டா குழுவிற்கு சிறப்பு பேட்டியளித்துள்ளார்.

devadharshini

அவர் கூறுகையில், தளபதி விஜயுடன் சேர்ந்து நடனம் ஆடியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. குறிப்பாக அந்த காட்சி படத்தில் வருமா ? வராதா என்ற ஏக்கத்தில் இருந்தேன். பின்பு படத்தில் பார்த்தவுடன் மிக்க மகிழ்ச்சி என்றார். இயக்குனர் அட்லீ அனைவரோடும் பழகுவார். ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் முதல் சீனியர் ஆர்ட்டிஸ்ட் வரை கம்ஃபோர்ட் சோனில் வைத்திருப்பார். மேலும் விஜய் சார் ஃபிரமில் பார்ப்பதற்கு இளமையாக தெரிந்தார், எப்படி ராயப்பன் பத்திராதிற்கு பொருந்துவார் என்று எண்ணினேன், பிறகு ராயப்பன் கேரக்டரில் அந்த மேக்கப்புடன் உடல் பாவனையில் தளர்ச்சியை வெளிப்படுத்தி அசத்தினார். நான் விஜய் அவர்களிடம் சென்று ஹாய் டாடி என்றேன்.