தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் மாஸ்டர். இப்படத்தில், மாளவிகா மோகனன், ஸ்ரீமன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீநாத், நாகேந்திர பிரசாத், ரமேஷ் திலக் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 

master

டெல்லி கல்லூரியில் நடந்த படப்பிடிப்பில் VJ ரம்யா, 96 புகழ் கௌரி கிஷன், இணையதள புகழ் பிரிகிடா போன்றோர் நடித்தனர். ஷிவமோகா படப்பிடிப்பு முடிந்து தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. மக்கள் செல்வன் விஜய்சேதுபதி அரசியல் வாதியாக நடிக்கிறார் என்று பேசப்படுகிறது. படத்தின் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. படத்தின் விநியோக உரிமையை செவென் ஸ்க்ரீன் ஸ்டுடியோ கைப்பற்றியுள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஏப்ரல் மாதம் வெளியாகும் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. 

master master

சென்னை காசிமேடு மற்றும் ராயபுரத்தில் மாஸ்டர் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதன் மூன்றாம் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி அசத்தியது. தற்போது படத்தின் ஓப்பனிங் பாடலின் பாடல் வரிகள் என சில வரிகள் இணையத்தில் வேகமாக பரவியது. "அண்ணாத்த நடந்து வந்தா பொறிபறக்கனும்....
நீயும் தான் அடங்கி ஒடுங்கனும். எவன் உண்டு இவரை வெல்ல 
இவர் உண்டு அந்த எமனையும் வெல்ல"
இதுகுறித்து விஜய் தரப்பினரை கேட்டபோது இச்செய்தி முற்றிலும் தவறானது என தெளிவு படுத்தினர்.