ஹாரர் காமெடி படமான யாமிருக்க பயமே படத்தை இயக்கிய டீகே இயக்கத்தில் வைபவ் நடிப்பில் உருவாகிய திகில் திரைப்படம் காட்டேரி. வித்தியாசமான திகில் படமாக தயாராகி வரும் இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். இதில் வரலக்ஷ்மி சரத்குமார், சோனம் பாஜ்வா, கருணாகரன், ஆத்மிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

Deekay Says Oviya Opted Out Of Katteri Due To Remuneration Issues

கொடூரமான பெயர் உள்ள பேயைத்தான் கிராமப்பகுதிகளில் காட்டேரி என சொல்வதுண்டு அந்த அடிப்படையில் இப்படமும் பயங்கர த்ரில்லாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 17-ம் தேதி வெளியாகவிருந்த இந்த படம் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. சமீபத்தில் படத்தின் முதல் சிங்கிளான என் பேரு என்ன கேளு பாடல் தற்போது வெளியானது. 

Deekay Says Oviya Opted Out Of Katteri Due To Remuneration Issues Deekay Says Oviya Opted Out Of Katteri Due To Remuneration Issues

இப்படம் உருவான விதம் குறித்தும், தனது திரைப்பயணம் குறித்தும் கலாட்டா குழுவுடன் பகிர்ந்து கொண்டார் இயக்குனர் டீகே. அப்போது பேசியவர், நடிகை ஓவியா இந்த படத்தில் நடிக்காததற்கான காரணத்தை தெரிவித்தார். ஓவியா பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகு இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டாராம். ஏற்கனவே நாங்கள் இருவரும் யாமிருக்க பயமேன் படத்தில் பணிபுரிந்ததால், காட்டேரி படத்திலும் நடிப்பதாக கூறினார். ஸ்டுடியோ கிரீன் அலுவலகத்தில் தான் ஓவியாவை முதலில் கமிட் செய்தோம். பின் நல்ல ஊதியத்துடன் புதிய ப்ராஜெக்ட் வந்திருப்பதால் அதில் நடிப்பதாக கூறினார். எங்களால் திடீரென சம்பளத்தை அதிக படுத்த முடியாது. அதனால் தான் ஓவியா இந்த படத்திலிருந்து விலகினார். 

லாக்டவுன் நீடித்து கொண்டே சென்றால், திரையரங்குகள் திறக்கப்படா விட்டால், நேரடியாக ஓடிடி-ல் தான் வெளியிடவேண்டும். பொறுத்திருந்து பார்க்கலாம் என்று கூறினார் இயக்குனர் டீகே.