நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் அதிக ரசிகர்களை பெற்றவர் டிடி. இசை, நடனம், காமெடி என பல மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இவரது இயல்பான நகைச்சுவையால் திரைப்பிரபலங்களையும் ரசிகர்களாக மாற்றியவர். சின்னத்திரை மட்டுமல்லாமல் நள தமயந்தி, பவர் பாண்டி போன்ற படங்களில் முக்கியமான ரோலில் நடித்தார். 

சமீபத்தில் காலில் அடிபட்ட DD அதிலிருந்து குணமாகி வருகிறார். கொரோனா லாக்டவுன் காரணமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் DD, இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். சில நாட்கள் முன்பு கூட ரசிகர்களின் கேள்விகளுக்கு லைவ்வில் தோன்றி பதிலளித்தார். இந்த லாக்டவுனில் தொலைக்காட்சி பிரியர்கள் அதிகம் மிஸ் செய்வது DD-ன் சேட்டைகளைத் தான். 

இந்நிலையில் திவ்யதர்ஷினி சுஃபியும் சுஜாதாயும் திரைப்படத்தில் இடம்பெற்ற வாதிக்கலு வெள்ளரிப்ராவு பாடலுக்கு சோஃபாவில் அமர்ந்தபடி நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மல்லுகளின் வீடுகளில் இந்த பாடல் தான் அதிகம் ஒலித்துக்கொண்டிருப்பதாக பதிவு செய்துள்ளார். நானும் வீட்டில் வேலையில்லாமல் இருப்பதால் இந்த பாடலை தான் அதிகம் கேட்கிறேன் என்று கூறியுள்ளார். அவரது சகோதரி பிரியதர்ஷினி தான் இந்த சோஃபா கோரியோகிராப் செய்தது என்றும் குறிப்பிட்டுள்ளார். டிடி-யின் இந்த பதிவை ஷேர் செய்து வருகின்றனர் அவரது ரசிகர்கள். 

அதிதி ராவ் நடிப்பில் மலையாள திரைப்படமான சுஃபியும் சுஜாதாயும் திரைப்படம் வெளியாகியது. கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்கில் வெளியாகாமல், நேரடியாக அமேசான் ப்ரைமில் ஜூலை 3-ம் தேதி வெளியானது. விமர்சன ரீதியாகவும் கலவையான வரவேற்பை பெற்றது. லாக்டவுன் சீசனில் ஓடிடி-ல் வெளியாகும் திரைப்படங்களுக்கு இணையவாசிகளிடம் நல்ல வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. 

விஜய் பாபு தயாரிப்பில் நரணிபுழா ஷானவாஸ் இயக்கிய இந்த படத்தில் ஜெயசூர்யா முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். ஜெயச்சந்திரன் இசையமைத்திருந்தார். அணு மூதேதத் ஒளிப்பதிவு செய்தார். சில நாட்கள் முன்பு இப்படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு அசத்தியுள்ளனர் படக்குழுவினர்.