கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். வீட்டிலே முடங்கியிருக்கும் பிரபலங்கள் உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலைகள் செய்வது, டான்ஸ் ஆடுவது, பாடல் பாடுவது என பல வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். திரைப்பிரபலங்கள் தவிர்த்து கிரிக்கெட் வீரர்களும் சமூக ஊடகங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகின்றனர். 

David Warner Dancing For Ramuloo Ramulaa Song

இந்நிலையில் பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தற்போது மனைவி குழந்தைகளுடன் டிக் டாக்கில் அசத்தி வருகிறார். அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான அல வைக்குந்தபுரம்லோ படத்தின் ராமுலு ராமுலா பாடலுக்கு நடனமாடி டிக்டாக் செய்துள்ளார். 

David Warner Dancing For Ramuloo Ramulaa Song

இந்த ஆண்டின் சிறந்த கமர்ஷியல் படம் அல வைக்குந்தபுரம்லோ. ஃபேமிலி ஆடியன்ஸை ஈர்த்த இந்த படம் விமர்சன ரீதியாகவும், ரசிகர்களின் அபிமானத்தையும் பெற்றது. த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கிய இந்த படத்திற்கு தமன் இசையமைத்தார்.