திரையுலகின் சின்ன கலைவானர் என்று செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகர் விவேக். காமெடி ரோல் மட்டுமல்லாது எந்த ஒரு பாத்திரம் தந்தாலும் அதை ஏற்று நடிக்கக்கூடிய திறனை பெற்றவர். சிறந்த நடிகன் என்பதை கடந்து சீரான சமூக பணிகள் செய்து வரும் மனிதர். சமீபத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து தாராள பிரபு படத்தில் பட்டையை கிளப்பினார் விவேக். 

Darbar

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படத்தின் மாஸான தீம் மியூசிக் பின்னணியில் ஒலிக்க நடிகர் விவேக் ஸ்டைலாக நடப்பது, சிகரெட் தூக்கிப்போட்டுப் பிடிப்பது போன்ற வீடியோ காட்சிகளை வைத்து எடிட் செய்து வீடியோவாக ரசிகர் ஒருவர் வெளியிட்டிருந்தார். இந்த வீடியோவில் நடிகர் விவேக்கின் ஸ்டைலை பாராட்டி ரசிகர்கள் சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்து வருகின்றனர். இதற்கு நன்றி தெரிவித்த விவேக், ரசிகர்களின் மகிழ்ச்சிக்காக செய்யப்பட்டது என்று பதிவு செய்துள்ளார். 

Darbar

நடிகர் விவேக் காமெடி பாத்திரங்களில் நடித்தாலும், 90ஸ் கிட்ஸின் ஹீரோ என்றே கூறலாம். ஒவ்வொரு நகைச்சுவை காட்சியிலும் சமுதாயத்திற்கு தேவையான கருத்தை எடுத்துரைப்பார். விவேக் கைவசம் இந்தியன் 2, அரண்மனை 3 போன்ற படங்கள் உள்ளது.