சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 167-வது படமான தர்பார் படத்தை AR முருகதாஸ் இயக்கி வருகிறார். இதற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். நயன்தாரா, யோகிபாபு, பிரதீக், சுனில் ஷெட்டி, ஸ்ரீமன், நிவேதா தாமஸ், யோக்ராஜ் சிங் போன்ற நட்சத்திரங்கள் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கவுள்ளனர்.

rajini

பேட்ட படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்த நிஹாரிகா பசின் கான் இந்த படத்தில் காஸ்ட்டியூம் டிசைனராக பணியாற்ற உள்ளார். படத்தின் இரண்டு போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகியது. மிகவும் ஸ்டைலிஷாக உள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் சூப்பர்ஸ்டார் ரசிகர்கள்.

rajinikanth

darbar

தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் முழுவதும் படமாக்கப்பட்டு முடிவடைந்ததென பதிவு செய்துள்ளனர் லைக்கா நிறுவனம். இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை சிறப்பாக வந்துகொண்டிருக்கிறது என அனிருத் தெரிவித்திருந்தார். முழுவீச்சில் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.