சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 167-வது படமான தர்பார் படத்தை AR முருகதாஸ் இயக்கி வருகிறார். இதற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். நயன்தாரா, யோகிபாபு, பிரதீக், சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோக்ராஜ் சிங் போன்ற நட்சத்திரங்கள் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கவுள்ளனர்.

darbar

ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பல வருடங்களுக்குப் பிறகு ரஜினி காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார். படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.

rajinikanth darbar

சமீபத்தில் ஓப்பனிங் சாங் சும்மா கிழி பாடல் லிரிக் வீடியோ வெளியானது. எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய இந்த பாடல் இணையத்தை சும்மா கிழித்தது. தற்போது இரண்டாம் பாடல் வரும் டிசம்பர் 4-ம் தேதி வெளியாகிறது என்ற செய்தி நெருங்கிய திரை வட்டாரம் மூலம் தெரியவந்தது.