பேட்ட படத்தின் ப்ளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் தர்பார். ஏ.ஆர்.முருகதாஸ் இந்த படத்தை இயக்கியுள்ளார். லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.  இன்னும் இரு தினங்களில் வெளியாகவிருக்கும் இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. 

rajinikanth

நயன்தாரா இந்த படத்தின் ஹீரோயினாக நடித்துள்ளார். நிவேதா தாமஸ்,யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. 

rajinikanth

2 மணி நேரம் 39 நிமிடங்கள் உள்ள இந்த திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தற்போது படத்தின் கண்ணுல திமிரு பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியாகியது. சூப்பர்ஸ்டாரின் டான்ஸ் காட்சி மிக அற்புதமாக உள்ளது. நிவேதா தாமஸ் உடன் ரஜினி சேர்ந்து ஆடும் காட்சி பட்டையை கிளப்பும் என்றே கூறலாம்.