சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜனவரி 9-ம் தேதி வெளியான படம் தர்பார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்த படம் ரஜினி ரசிகர்களை கொண்டாட செய்தது. லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்தது. இதனைத்தொடர்ந்து சிவா இயக்கும் தலைவர் 168 திரைப்படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். சமீபத்தில் பியர் க்ரில்ஸ் நடத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 

rajini

நயன்தாரா இந்த படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார். நிவேதா தாமஸ்,யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து அசத்தினர். ராக்ஸ்டார் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்தார். வெகு நாட்களுக்கு பிறகு போலீஸ் கேரக்டரில் சூப்பர்ஸ்டார் நடித்திருந்தார். 2 மணி நேரம் 39 நிமிடங்கள் உள்ள இந்த திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டது. 

rajinikanth

தற்போது இந்த படம் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்ததாக விநியோகஸ்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் சென்னையில் உள்ள இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் அலுவலகத்தின் முன்பு திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு சரியான தீர்வு கிடைக்கிறதா அல்லது உண்மை நிலவரம் என்னவென்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 65 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட இந்த படம் தமிழ்நாட்டில் 25 கோடி நஷ்டத்தை சந்தித்ததாக கூறியுள்ளனர்.