சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 167-வது படமான தர்பார் படத்தை AR முருகதாஸ் இயக்கி வருகிறார். இதற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். நயன்தாரா, யோகிபாபு, பிரதீக், சுனில் ஷெட்டி, ஸ்ரீமன், நிவேதா தாமஸ், யோக்ராஜ் சிங் போன்ற நட்சத்திரங்கள் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கவுள்ளனர்.

darbar

ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பல வருடங்களுக்குப் பிறகு ரஜினி காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார். படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் சூப்பர்ஸ்டார் ரசிகர்கள்.

rajinikanth ARMurugadoss

தற்போது படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 7-ம் தேதி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் என தெரியவந்தது. அதுமட்டுமல்லாமல் தர்பார் படத்தின் டப்பிங் பணிகளை சூப்பர்ஸ்டார் துவங்கியதாக இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.