தங்கலான் படத்தில் பிரிட்டிஷ்காரர்களை பா.ரஞ்சித் சித்தரிக்கும் விதம்... மனம் திறந்த ஹாலிவுட் நடிகர் டானியல் கால்டகிரோன்! சிறப்பு பேட்டி இதோ

பா ரஞ்சித் - தங்கலான் படம் குறித்து பேசிய டேனியல் கால்டகிரோன்,daniel caltagirone reveals portrayals of pa ranjith in thangalaan | Galatta

இந்திய சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழும் சீயான் விக்ரம் முதல் முறை இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். 1800-களின் காலகட்டத்தில் நடைபெறும் பீரியட் திரைப்படமாக கேஜிஎஃப் கதை களத்தை மையப்படுத்தி பிரம்மாண்டமாக 3D தொழில்நுட்பத்தில் தயாராகும் தங்கலான் திரைப்படத்தை தயாரிப்பாளர் K.E.ஞானவேல் ராஜா அவர்களின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மற்றும் இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களின் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து வழங்குகின்றன. சீயான் விக்ரமுடன் இணைந்து பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி ஆகியோர் முக்கிய வேடங்களில் தங்கலான் திரைப்படத்தில்  நடிக்கின்றனர்.  கிஷோர் குமார் ஒளிப்பதிவில், செல்வா.RK படத்தொகுப்பு செய்யும் தங்கலான் திரைப்படத்திற்கு GV.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். தங்கலான் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நமது கலாட்டா பிளஸ் சேனலில் திரு பரத்வாஜ் ரங்கன் அவர்களுடைய நேர்காணலில் கலந்து கொண்ட பிரபல பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் அவரிடம் மேற்கத்திய திரைப்படங்களில் நீங்கள் நடிப்பதற்கும் இந்திய திரைப்படங்களில் நீங்கள் நடிப்பதற்கும் பா.ரஞ்சித் அவர்கள் கதாப்பாத்திரங்களை கையாண்ட அல்லது காண்பிக்கும் விதம் எப்படி இருந்தது? என கேட்டபோது,

“என்னால் படத்தை குறித்து எதுவும் சொல்ல முடியாது. இந்த பயணத்தில் செல்லும் இந்த ஆண்களோடு விலைமதிப்பற்ற ஒரு பொருளை (தங்கம்) தேடி நான் முன்னால்  செல்கையில், 1800 களின் காலகட்டத்தில் அது எப்படி நடந்தது… பிரிட்டிஷ் காலகட்டத்தில் அதை எப்படி நடத்தப்பட்டது… மேலும் அதை எப்படி காட்டப்பட்டது, என்பதை இதற்கு முன் காட்டப்பட்டது போல் கிளீஷேவாக இல்லாமல் காட்ட வேண்டும். சமீபத்தில் RRR படம் பார்த்தோம் இப்போதும் எனக்கு அந்த படம் பிடிக்கிறது. ஆனால் அந்த படத்தில் பிரிட்டிஷ்காரர்களை காட்டப்பட்ட விதம் மிக மிக கிளீஷேவாக இருந்தது. ஆனால் அப்படித்தான் பிரிட்டிஷ்காரர்களை இந்திய சினிமாவில் பயன்படுத்துகிறார்கள் சரி தானே? ஆனால் பா.ரஞ்சித் என்னை அப்படி பயன்படுத்தவில்லை. இது முழுக்க முழுக்க கிரே ஏரியாவில் இருக்கும்.  இந்திய திரைப்படங்களில் அழுத்தம் இருக்கிறது அது இவரிடம் அதிகமாகவே இருக்கிறது.” என தெரிவித்துள்ளார். இன்னும் தங்கலான் திரைப்படம், சீயான் விக்ரம் மற்றும் இயக்குனர் பா.ரஞ்சித் அவர்கள் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்ட நடிகர் டேனியல் கால்டகிரோனின் முழு பேட்டி இதோ...
 

'கார்த்திகை தீபம் சீரியலில் வில்லியாக என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை யார் தெரியுமா?'- விவரம் உள்ளே
சினிமா

'கார்த்திகை தீபம் சீரியலில் வில்லியாக என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை யார் தெரியுமா?'- விவரம் உள்ளே

பத்து தல படத்தில் சிலம்பரசன்TR உடனான பயணம் - இயக்குனர்கள் மாற்றம்... மனம் திறந்த கௌதம் கார்த்திக்கின் சிறப்பு பேட்டி இதோ!
சினிமா

பத்து தல படத்தில் சிலம்பரசன்TR உடனான பயணம் - இயக்குனர்கள் மாற்றம்... மனம் திறந்த கௌதம் கார்த்திக்கின் சிறப்பு பேட்டி இதோ!

பத்து தல படத்தில் சிலம்பரசன்TRக்கு ஜோடி இல்லாததால் இது மிஸ் ஆயிடுச்சு... KEஞானவேல் ராஜாவின் கலக்கலான பதில் - கலகலப்பான வீடியோ இதோ!
சினிமா

பத்து தல படத்தில் சிலம்பரசன்TRக்கு ஜோடி இல்லாததால் இது மிஸ் ஆயிடுச்சு... KEஞானவேல் ராஜாவின் கலக்கலான பதில் - கலகலப்பான வீடியோ இதோ!