தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் தளபதி 64. இப்படத்தில், மாளவிகா மோகனன், ஸ்ரீமன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீநாத், நாகேந்திர பிரசாத் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். 

thalapathy

டெல்லி கல்லூரியில் நடந்த படப்பிடிப்பில் VJ ரம்யா, 96 புகழ் கௌரி கிஷன், இணையதள புகழ் பிரிகிடா போன்றோர் நடித்தனர். ஷிமோகாவில் தற்போது நடக்கும் படப்பிடிப்பில் டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இணைந்துள்ளார் என்ற தகவல் தெரியவந்தது. 

sathishkrishnan

இந்த படப்பிடிப்பில் விஜய்சேதுபதி இருக்கும் காட்சிகள் படமாக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பு தளத்திலிருந்து தினசரி விஜய் உள்ள வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது. 2020 ஏப்ரலில் இப்படம் திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.