தமிழ் திரையுலகில் காமெடியனாக இருந்து அசத்தலான ஹீரோவாக மாறியிருப்பவர் நடிகர் சந்தானம். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான நகைச்சுவை திரைப்படம் ஏ1.  ஜான்சன் இயக்கிய இந்த படம் இந்த ஆண்டின் மிகச்சிறந்த காமெடி படமாக அமைந்தது. 

yogibabu

அதனைத் தொடர்ந்து சந்தானம் நடிப்பில் வெளியான படம் டகால்டி. இந்த படத்தை விஜய் ஆனந்த் இயக்கியுள்ளார். 18 ரீல்ஸ் சார்பாக எஸ்.பி.சௌத்ரி தயாரித்துள்ளார். இந்த படத்தில் யோகி பாபு, ரித்திகா சென், ராதாரவி, தருண் அரோரா, சந்தான பாரதி, மனோ பாலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். U/A சான்றிதழ் வழங்கப்பட்ட இந்த படம் வெளியாகி சுமாரான வரவேற்பையே பெற்றது. 

santhanam yogibabu

தீபக் குமார் ஒளிப்பதிவு செய்ய விஜய் நரேன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். தற்போது படத்தின் இரண்டாம் ஸ்னீக் பீக் வீடியோ வெளியானது. சந்தானம் கைவசம் சர்வர் சுந்தரம், டிக்கிலோனா போன்ற படங்கள் உள்ளது.