சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் டகால்டி. இந்த படத்தை விஜய் ஆனந்த் இயக்கியுள்ளார். 18 ரீல்ஸ் சார்பாக எஸ்.பி.சௌத்ரி தயாரித்துள்ளார். இந்த படத்தில் யோகி பாபு, ரித்திகா சென், ராதாரவி, தருண் அரோரா, சந்தான பாரதி, மனோ பாலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். U/A சான்றிதழ் வழங்கப்பட்ட இந்த படம் வெளியாகி சுமாரான வரவேற்பையே பெற்றது. 

santhanam

தீபக் குமார் ஒளிப்பதிவு செய்ய விஜய் நரேன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். தற்போது படத்திலிருந்து ஆலியா ஆலியா பாடல் ப்ரோமோ வெளியானது. ஹர்ஷிதா கிருஷ்ணன் மற்றும் கெளதம் பரத்வாஜ் பாடிய இந்த பாடல் வரிகளை மதன் கார்கி எழுதியுள்ளார். 

santhanam

சந்தானம் கைவசம் டிக்கிலோனா மற்றும் சர்வர் சுந்தரம் போன்ற படங்கள் ரிலீஸுக்கு உள்ளது. இதில் சர்வர் சுந்தரம் பிப்ரவரி 14-ம் தேதி வெளியாகவுள்ளது.