சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைக்கும்.அதில் நடிக்கும் புதுமுகங்கள் கூட ரசிகர்கள் மத்தியில் பிரபலங்களாக வெகு விரைவில் வளர்ந்து விடுவார்கள்.கொரோனா முதல் அலையை அடுத்து தொடங்கப்பட்ட புதிய தொடர் பூவே உனக்காக.தொடங்கப்பட்டது முதல் ரசிகர்கள் மத்தியில் அதீத வரவேற்பை பெற்று வருகிறது.

அஷீம்,ராதிகா ப்ரீத்தி,ஸ்ரீனிஷ் அரவிந்த்,தேவிப்பிரியா,ஸ்ரீதேவி அசோக்,சாயாசிங் உள்ளிட்டோர் முன்னணி வேடங்களில் நடித்து வருகின்றனர்.சில மாதங்களுக்கு முன் இந்த தொடரில் நடித்து வந்த அருண்,ஜோவிதா உள்ளிட்டோர் விலக அவர்களுக்கு பதில் அஷீம் உள்ளிட்டோர் இணைந்துள்ளனர்.

சில முக்கிய நடிகர்கள் விலகினாலும் கதையின் விறுவிறுப்பு குறையாமல் சீரியல் குழுவினர் பார்த்துக்கொண்டு வருகின்றனர்.இந்த தொடர் 300 எபிசோடுகளை கடந்து ரசிகர்களை வெகுவாக ஈர்த்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் தொடர்களில் நடித்து வரும் கம்பம் மீனா இணைந்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இவரது எபிசோடுகள் ஒளிபரப்பை தொடங்குகியுள்ளன.