உலகையே அச்சுறுத்தி வரும் COVID-19 எனப்படும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.இந்தியாவில் இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் அதனை கட்டுக்குள் கொண்டு வர அரசு தங்களால் முடிந்த வேலைகளை செய்து வருகின்றனர்.

Corona Effect Thala Ajith Donates Press Union

கொரோனா குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இதனால் பலதரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

Corona Effect Thala Ajith Donates Press Union

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் பிரதமரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம்,முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் மற்றும் ஷூட்டிங் எதுவும் நடக்காததால் பாதிக்கப்பட்டுள்ள FEFSI தொழிலாளர்களுக்கு ரூ.25 லட்சமும்,PRO யூனியனுக்கு ரூ.2.5 லட்சமும் வழங்கியிருந்தார்.இதனை தொடர்ந்து சினிமா பத்திரிகையாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு அஜித் ரூ.2.5 லட்சம் அளித்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

Corona Effect Thala Ajith Donates Press Union