விஜய் டிவியின் வித்தியாசமான முயற்சியாக ஒளிபரப்பாகி ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த நிகழ்ச்சியாக மாறியது குக் வித் கோமாளி.சமையல் நிகழ்ச்சியில் காமெடியன்களை சேர்த்து கலக்கிய இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் அதீத வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த நிகழ்ச்சியின் இரண்டு சீசன்கள் நிறைவடைந்து மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி சமீபத்தில் நிறைவடைந்தது.10 போட்டியாளர்கள் மற்றும் 10 கோமாளிகளுடன் இந்த தொடர் பெரிய வரவேற்பை பெற்றது.நடுவர்களாக வெங்கடேஷ் பட் மற்றும் தாமு இந்த தொடரிலும் இருந்தனர்.பழைய கோமாளிகள் மணிமேகலை,சிவாங்கி,சுனிதா மற்றும் பாலா உள்ளிட்டோர் உள்ளனர்.

இவர்களை தவிர சக்தி,குரேஷி,சூப்பர் சிங்கர் பரத் மற்றும் மூக்குத்தி முருகன்,அதிர்ச்சி அருண் உள்ளிட்டோர் புதிய கோமாளிகளாக இணைந்து அசத்தினர்.இந்த நிகழ்ச்சி.பத்து போட்டியாளர்களுடன் மேலும் 2 வைல்ட்கார்டு போட்டியாளர்கள் இணைந்து போட்டியின் விறுவிறுப்பை மேலும் வலுப்படுத்தினர்.இந்த நிகழ்ச்சி கடந்த வாரத்துடன் நிறைவுக்கு வந்தது.

குக் வித் கோமாளி 3யின் வெற்றியாளராக ஸ்ருதிகா பட்டத்தை கைப்பற்றினார்.தர்ஷன்,அம்மு அபிராமி அடுத்த இரண்டு இடங்களை பிடித்தனர்.வழக்கம்போல இந்த சீசனும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று செம ஹிட் அடித்தது.இரண்டு சீசன்களாக குக் மற்றும் கோமாளிகளுக்கு கொடுக்கப்பட்டு வந்த விருதுகள் இந்த முறை ஹாட்ஸ்டாரில் இடம்பெறவில்லை இதனால் சில ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர்.அந்த விருது வீடீயோவை பிரத்யேகமாக யூடியூப்பில் வெளியிட்டுள்ளனர் விஜய் டிவி.இதனை கீழே உள்ள லிங்கில் காணலாம