எதார்த்தமான நகைச்சுவை உணர்வால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் தொலைக்காட்சி பிரபலம் புகழ். தன்னைத்தானே தாழ்த்திக் கொண்டு அனைவரையும் சிரிக்க வைக்கும் இவரது பேச்சு ரசிகர்களுக்கு ஃபேவரைட். பல்வேறு நிகழ்ச்சிகளில் இவர் தோன்றியிருந்தாலும் சமீபத்தில் வெளியான குக் வித் கோமாளி நிகழ்ச்சி இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில், ரம்யா பாண்டியன் உடன் இவர் அடித்த காமெடி கூத்து யாரையும் காயப்படுத்தாமல் அனைவரையும் ரசிக்க வைத்த நிலையில் இப்போது இரண்டாம் சீசனில் ஸ்கோர் செய்து வருகிறார். 

தல அஜித் நடிக்க H.வினோத் இயக்கி வரும் வலிமை படத்தில் முக்கிய ரோலில் புகழ் நடிப்பதாக செய்திகள் வெளியாகி வருவதை காண முடிகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் நண்பர்களுடன் சேர்ந்து பாடல் பாடி வீடியோ வெளியிட்டுள்ளார் புகழ். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேலைக்காரன் படத்தில் இடம்பெற்ற தோட்டத்தில பாத்திகட்டி பாடலை பாடியுள்ளார்.  இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது. 

காமெடி மட்டும் தான் வரும் என்று நினைத்தோம்.. பாடலும் பாடுறீங்களே புகழ்..சபாஷ். இன்னும் பல புகழ் உங்களை வந்து சேர வேண்டும் என்று வாழ்த்தி வருகின்றனர் புகழ் ரசிகர்கள். இந்த வாரம் வழக்கம் போல சனி, ஞாயிறு குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், அந்த எதிர்பார்ப்பு பொய்யாகியிருக்கிறது. 

இந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் தொடக்க விழா காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை இடைவிடாது 9 மணிநேரம் ஒளிபரப்பாகிறது. அதனால் இந்த ஞாயிற்றுக்கிழமையும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இல்லாதது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.