தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளம்.  அதிலும் ஷிவாங்கிக்கு ரசிகர்கள் எக்கச்சக்கம் என்றே கூறலாம். தற்போது இந்த நிகழ்ச்சியின் 2வது சீசன் மிக கலகலப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் நடிகை சகிலா, பாபா பாஸ்கர் மாஸ்டர், அஸ்வின், கனி ,பவித்ரா உள்ளிட்ட பலர் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளை வைத்துக் கொண்டு போட்டியாளர்கள் சமையல் செய்ய போராடும் காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.

சூப்பர் சிங்கரை விட இப்போ தான் ஷிவாங்கிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். குக் வித் கோமாளி சீசன் 2வில் கோமாளியாக கலந்து கொண்டு ஷிவாங்கி அஸ்வின் உடன் இணைந்து செய்யும் அட்டகாசங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. குழந்தைத் தனமாக இவர் செய்யும் சேட்டைகள் தான் ரசிகர்கள் மத்தியில் இவரை பிரபலமாக்கி உள்ளது.

சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் ஹாசினி கதாபாத்திரத்தில் ஜெனிலியா நடித்தது போலத் தான் ரியல் லைஃப்பில் ஷிவாங்கி இருக்கிறார் என்பதே ஏகப்பட்ட ரசிகர்களின் கருத்து. சின்னத்திரை ஹாசினி என்றும் சின்னத்திரை ஜெனிலியா என்றும் இவருக்கு ஏகப்பட்ட பட்டப் பெயர்களையும் வைத்து அழைத்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக கோமாளியாக கலக்கி வரும் சிவாங்கியும், புகழும் செய்யும் ரகளைகளுக்கு ரசிகர்கள் ஏராளம். தற்போது நடிகர் சிவகார்த்திகேயனின் டான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனது பள்ளி தோழிகளுடன் சிவாங்கி எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

குக் வித் கோமாளி பிரபலங்களான புகழ் மற்றும் ஷிவாங்கிக்கு சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சமீபத்தில் டான் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கூட ஷிவாங்கி கலந்து கொண்டார்.

ஷிவாங்கியின் பள்ளிப் பருவ புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் செம அழகா இருக்கீங்க என வர்ணித்து அந்த போட்டோக்களை வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்தில் காமெடியில் கண்டிப்பாக ஷிவாங்கி கலக்குவார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.