விஜய் டீவியில்  விரைவில் குக் வித் கோமாளி சீசன் 4 தொடங்கவிருக்கின்றது. அதற்கான புரோமாவை வெளியிட்டது விஜய் டீவியில் புது புது கோமாளியுடன் களமிறங்கியதால் வைரலாகி வருகிறது அந்த புரோமோ.

தொலைகாட்சி நிகழ்ச்சிகள் காலம் காலமாக வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் சில நிகழ்சிகளே மக்கள் மத்தியில் நிலைத்து நிற்கின்றது. அந்த வகையில் மக்களுக்கு பிடித்தமான நிகழ்சிகளை கொடுக்க கூடிய தொலைக்காட்சிகளில் விஜய் டீவி மக்களுக்கு நெருக்கமான தொலைகாட்சியாக இருந்து வருகிறது. சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன், நீயா நானா என்று விஜய் டீவி தனது நிகழ்ச்சிகளை பல வருடங்களாக  மக்களுக்கு வெகுவாக கொண்டு சேர்த்து வருகிறது. அதன்படி தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 6 விரைவில் நிறைவடைய இருக்கும் நிலையில் தனது அடுத்த டிரேட் மார்க் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 4 ஐ தொடங்கவிருக்கின்றது.

குக் வித் கோமாளி சமையலை மையப்படுத்திய ஒரு நிகழ்ச்சி, சமையல் தெரிந்த பிரபலங்களுடன் சமையலில் ‘அ’ னா ‘ஆ’ வனா கூட தெரியாத கோமாளிகளை இணைத்து கலாட்ட சமையல் செய்வது தான் இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சம்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் பலர் பிரபலமடைந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இரண்டாவது சீசன் மெகா ஹிட் அடித்து அனைத்து தரப்பு மக்களிடம் பேர் வாங்கியது, அந்த சீசனில் இருந்து வந்த அஷ்வின் தற்போது அவருகேன்ற ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இளம் நடிகராக தமிழ் சினிமாவில் பயணித்து வருகிறார். மேலும் பல ஆண்டு காலமாக தவறான கண்ணோட்டத்தில் அணுகி வந்த நடிகை சகிலாவின் வேறு ஒரு பரிமாணத்தை கொடுத்து அவருக்கான மரியாதையை உயர்த்தியதும் இந்த நிகழ்ச்சிதான். மற்றும் ரம்யா பாண்டியன், தர்ஷா குப்தா, பவித்ரா லக்ஷ்மி, சுனிதா, மணிமேகலை என பலருக்கு பல நல்ல அங்கீகாரத்தை கொடுத்தது இந்த நிகழ்ச்சி என்றே சொல்லலாம்.

மேலும் கோமாளியாக வரும் புகழ் தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வருகிறார் அஜித்துடன் வலிமை படத்திலும் சூர்யா வுடன் எதற்கும் துணிந்தவன் படத்திலும் விஜய் சேதுபதியுடன் டிஎஸ்பி படத்திலும் மற்றும் பல முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வருகிறார். மற்றும் அதே போல் சிவாங்கி, பாலா, சரத், குரேஷி என பலருக்கு ஒரு நல்ல மேடையாக இந்த நிகழ்ச்சி இருந்து வருகிறது. பங்கேற்பாளராக மட்டுமல்லாமல் நடுவராக வரும் செப் வெங்கடேஷ் பட், செப் தாமு அவர்களுக்கும் தொகுத்து வழங்கும் ரக்ஷன் க்கும்  மக்களிடையே நல்ல பேர் வழங்கிவுள்ளது

இந்நிலையில் இந்த தொடருக்கான 4 வது சீசன் தொடங்கி இருக்கிறது. இதற்கான புரோமை வெளியிட்டது. இந்த புரோமொவில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாதியில் வெளியேறிய ஜி.பி முத்து, இணையத்தில் வைரலாகி வரும் ஓட்டேரி சிவா, சிங்கபூர் தீபன் போன்றோர் புதிதாக இடம் பெற்றுள்ளனர். இதில் ஜி.பி. முத்து போட்டியாளரா? கோமாளியா என்று பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். மேலும் மீண்டும் ஒரு பிரம்மாண்டமான நிகழ்ச்சியில் ஜி.பி. முத்துவை பார்ப்பதால் அவரது ரசிகர்கள் ஆரவாரத்துடன் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து புரோமோவை வைரலாக்கி வருகின்றனர்.

“குக் வித் கோமாளி சிரிக்க ரெடியா பங்காளி” என்று புகழ் குரலில் புரோமோவை அனைவரும் வரவேற்று வருகின்றனர். நிச்சயம் இந்த சீசனும் மக்களுக்கு பிடித்த சீசனாக மாறும் என்பதில் எந்தவொரு  சந்தேகமும் இல்லை. யார் யார் போட்டியாளர் என்பது குறித்து ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.