அது இது எது,கலக்கப்போவது யாரு போன்ற விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சிகளில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து தனது காமெடி மூலம் தற்போது விஜய் டிவியின் முன்னணி காமெடியனாக மற்றும் அல்லாமல் பல திரைப்படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார் புகழ்.

முதலில் பெண் வேடமிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் புகழ்.அடுத்ததாக விஜய் டிவியின் புதிய முயற்சியாக தொடங்கிய குக் வித் கோமாளி தொடரில் பங்கேற்றார் புகழ்.இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் கவனம் பெற்றார் புகழ்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் காமெடியில் கலக்க பட்டி தொட்டி எங்கும் உள்ள ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து , பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றார் புகழ்.இதனை அடுத்து யானை,எதற்கும் துணிந்தவன் போன்ற பல படங்களில் நடித்து வருகிறார் புகழ்.கதாநாயகனாகவும் ஒரு படத்தில் நடித்து வருகிறார் புகழ்.

இவர் பென்ஸ் ரியா என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வருவதாக சில மாதங்களுக்கு முன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தெரிவித்தார்.தற்போது புகழுக்கும் அவரது காதலிக்கும் திருமணம் திண்டிவனத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.