விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் புகழ். புகழ் இல்லை என்றால் நிகழ்ச்சியே இல்லை என்றளவுக்கு அவரின் பங்களிப்பு இருக்கும். தொடர்ந்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார் புகழ். வலிமை, அருண் விஜய் - ஹரி இணையும் படம் என தொடர்ந்து படங்களில் பிஸியாகி பணிபுரிந்து வருகிறார். 

சமீபத்தில் தான் கார் வாங்கியிருப்பது குறித்த வீடியோ ஒன்றை தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார் புகழ். அதில், தான் எப்படி கார் கழுவி சம்பாதித்துக் கஷ்டப்பட்டு இந்த அளவுக்கு உயர்ந்து கார் வாங்கியுள்ளேன் என்பது குறித்து நெகிழ்ச்சியுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

தற்போது, சபாபதி எனும் படத்தில் சந்தானத்துடன் நடித்து வருகிறார் புகழ். அதன் படப்பிடிப்பில் தனது புதிய காரை சந்தானத்திடம் காட்டியிருந்தார். அந்தக் காரை ஓட்டிப் பார்த்து, புகழுக்குப் பாராட்டு தெரிவித்திருந்தார் சந்தானம். 

ரசிகர்களின் ஃபேவரைட்டான புகழ், குக் வித் கோமாளி நிறைவு பெற்றதால் அந்நிகழ்ச்சி குறித்து பதிவு ஒன்றை செய்திருந்தார். அதில் மிஸ் யூ மக்களே. எனது வித் கோமாளி டீம்.  ரொம்ப கஷ்டமா இருக்கு. அழுகையா வருகிறது என்று வேதனையுடன் பதிவு செய்திருந்தார். புகழ் பல நேரம் எமோஷனல் ஆவதை பார்த்துள்ளனர் ரசிகர்கள். 

இந்நிலையில் படத்திற்காக டப்பிங் செய்த வீடியோவை பதிவு செய்துள்ளார் புகழ். கண்ணீருடன் அழுதபடி புகழ் டப்பிங் செய்ததை பார்த்த ரசிகர்கள், அவரை பாராட்டி வருகின்றனர். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vijay Tv Pugazh (@vijaytvpugazh)