விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வெற்றிகரமான தொடர்களில் ஒன்று குக் வித் கோமாளி.இந்த தொடரின் இரண்டாவது சீசனில் பிரபல மாடலும் நடிகையுமான பவித்ரா லக்ஷ்மி பங்கேற்று வருகிறார்.இந்த தொடரின் மூலம் பட்டிதொட்டி எங்கும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் பவித்ரா.குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் கனவுக்கன்னியாக அவதரித்தார் பவித்ரா.

இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் சில குறும்படங்கள்,ஆல்பம் பாடல்கள் போன்றவற்றில் நடித்திருந்தார் பவித்ரா.மேலும் உல்லாசம் என்ற மலையாள படத்தில் ஹீரோயினாக நடித்தும் அசத்தியுள்ளார் பவித்ரா.உங்களில் யார் பிரபுதேவா நிகழ்ச்சியிலும் இவர் பங்கேற்று அசத்தியிருந்தார்.மேலும் மிஸ் மெட்ராஸ் போன்ற சில பட்டங்களையும் வென்று அசத்தியுள்ளார் பவித்ரா.

இவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.இந்த விழாவில் செய்தியாளர்களை சந்தித்த பவித்ரா அவர்கள் எழுப்பிய பல சுவாரசியமான கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார்.அப்போது நிருபர் ஒருவர் விஜயின் தளபதி 65 படத்தில் நடிக்கிறீர்களா என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த பவித்ரா இதுவரை அதுபோல எதுவும் நடக்கவில்லை அப்படி எதுவும் நடந்தால் உங்களுக்கு ட்ரீட் வைக்கிறேன் என்று செம ஜாலியாக பதிலளித்துள்ளார்.இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் செம வைரலாகி வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்