கடின உழைப்பால் புதிய கனவு வீட்டை கட்டும் CWC சீசன் 4ன் முக்கிய கோமாளி... குவியும் ரசிகர்களின் வாழ்த்துகள்!

புதிய வீடு கட்டும் குக் வித் கோமாளி மணிமேகலை,cook with comali manimegalai start to build new farm house | Galatta

தமிழ் மக்களின் மனதை கவர்ந்த முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களில் ஒன்றாக தொடர்ந்து அசத்தலான நிகழ்ச்சிகளையும் மெகா தொடர்களையும் வழங்கி முன்னணி இடத்தை பிடித்த தொலைக்காட்சி விஜய் டிவி. குறிப்பாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளின் மீது ரசிகர்களுக்கு தனி கவனம் உண்டு. அந்த வகையில் மக்களின் மனதை விட்டு நீங்காத ரியாலிட்டி நிகழ்ச்சியாக தொடர்ந்து மகிழ்வித்து வருகிறது குக் வித் கோமாளி. கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சி சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயது ரசிகர்களும் விரும்பும் ரியாலிட்டி நிகழ்ச்சியாக தொடர்ந்து விஜய் டிவியில் வெற்றி நடை போட்டு வருகிறது. 

கலகலப்பான சமையல் நிகழ்ச்சியாக ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் அஸ்தான நடுவர்களாக புகழ்பெற்ற சமையல் நிபுணர்களான செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் ஆகியோர் நடுநிலையோடு நீதிபதிகளாக இருக்க , ரக்ஷன் தொகுப்பாளராக தொடர்ந்து 4 சீசன்களாக தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மூன்று சீசன்கள் நிறைவடைந்துள்ளன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு குக் வித் கோமாளி சீசன் 4 தொடங்கப்பட்டது.

இந்த முறை குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக ஆண்ட்ரேன் நோக்ரியாட், ஜிகர்தண்டா நடிகர் காளையன், இயக்குனரும் நடிகருமான கிஷோர் ராஜ்குமார், வலிமை பட நடிகர் ராஜ் ஐயப்பா, நடிகை ஷெரின், நடிகை ஷ்ருஷ்டி டாங்கே, நடிகை விசித்ரா, VJ விஷால் ஆகியோருடன் கோமாளியாக இதுவரை கலக்கிய சிவாங்கி போட்டியாளராக களமிறங்கியுள்ளார். மேலும் கோமாளிகளாக மணிமேகலை, புகழ், குரேஷி, சுனிதா, GPமுத்து, ஓட்டேரி சிவா, சில்மிஷம் சிவா, சிங்கப்பூர் தீபன், ரவீனா, மோனிஷா பிளஸ்சி ஆகியோர் கலக்கி வருகின்றனர். வாராவாரம் ஆரவாரம் என சொல்லும் அளவிற்கு வழக்கம்போல் இந்த முறையும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி சக்கை போடு போட்டு வருகிறது.

இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முக்கிய கோமாளிகளில் ஒருவரான மணிமேகலை இனிப்பான செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளார். முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய மணிமேகலை பின்னர் விஜய் தொலைக்காட்சியிலும் தொகுப்பாளராக களமிறங்கினார். தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட மணிமேகலை தொடர்ந்து தனக்கே உரித்தான பாடி லாங்குவேஜில் இயல்பாக பேசி ரசிக்க வைக்கிறார். இந்நிலையில் தனது சமூக வலைதள பக்கங்களில் கணவர் உசைனோடு பூமி பூஜை செய்யும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள மணிமேகலை, "HM பண்ணை வீட்டின் பாலக்கால் பூஜை!! கடவுளின் அருளாலும் கடின உழைப்பாலும் எங்களுடைய குட்டி ராஜ்யத்தை கட்ட தொடங்கி இருக்கிறோம். எங்களுடைய எப்போதுமான மகிழ்ச்சி நிறைந்த இடமாக இருக்கப் போகிறது. தொடர்ந்து எப்போதும் போல் எங்களை வாழ்த்துங்கள். கனவு காணுங்கள் & நடத்துங்கள் எனக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். எனவே மணிமேகலை மற்றும் உசைனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. குக் வித் கோமாளி மணிமேகலையின் அந்தப் பதிவு இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Mani Megalai (@iammanimegalai)

இறுதி கட்டத்தை நெருங்கிய சிலம்பரசன்TRன் பத்து தல... அசத்தலான ஷூட்டிங் அப்டேட் கொடுத்த இயக்குனர்! விவரம் உள்ளே
சினிமா

இறுதி கட்டத்தை நெருங்கிய சிலம்பரசன்TRன் பத்து தல... அசத்தலான ஷூட்டிங் அப்டேட் கொடுத்த இயக்குனர்! விவரம் உள்ளே

விஜய்க்கும் இந்தப் பொறுப்பு இருக்கு..!- லியோ படம் தொடர்பாக தளபதி விஜய்க்கு சீமான் அறிவுரை! விவரம் உள்ளே
சினிமா

விஜய்க்கும் இந்தப் பொறுப்பு இருக்கு..!- லியோ படம் தொடர்பாக தளபதி விஜய்க்கு சீமான் அறிவுரை! விவரம் உள்ளே

காஜல் அகர்வால்-யோகி பாபுவின் அசத்தலான ஹாரர் காமெடி ட்ரீட் தயார்… கோஸ்டி பட ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ!
சினிமா

காஜல் அகர்வால்-யோகி பாபுவின் அசத்தலான ஹாரர் காமெடி ட்ரீட் தயார்… கோஸ்டி பட ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ!