தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் ரசிகர்களின் ஃபேவரட்டான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதுவரை நடந்து முடிந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டு சீசன்களும் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது மூன்றாவது சீசனும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மிக முக்கியமான கோமாளியாக தொடர்ந்து ரசிகர்களை மகிழ்வித்து வருபவர் மணிமேகலை. கடந்த சில ஆண்டுகளாக சன் மியூசிக், சன் டிவி மற்றும் விஜய் டிவி உள்ளிட்ட பல சேனல்களில் முன்னணி தொகுப்பாளினியாக பல நிகழ்ச்சிகளை  மணிமேகலை தொகுத்து வழங்கி வருகிறார்.

மேலும் தனது யூடியூப் சேனல் வாயிலாகவும் தனது கணவரும் நடன கலைஞருமான ஹுஸைனடன் இணைந்து பல வீடியோக்களை பதிவேற்றம் செய்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்று மக்களின் ஃபேவரட்டான தொலைக்காட்சி பிரபலமாக திகழ்கிறார் மணிமேகலை. இந்நிலையில் மணிமேகலை மற்றும் ஹுஸைனின் விலை உயர்ந்த பைக் தற்போது திருடு போயுள்ளது.

இது குறித்து மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொலைந்து போன பைக்குடன் தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து, “எங்களது பைக் இன்று அதிகாலை அசோக் நகர் பகுதியில் திருட்டு போனது… திருமணத்திற்கு பிறகு கஷ்டப்பட்டு சம்பாதித்து ஆசையாக வாங்கிய முதல் பைக்… வருஷத்துக்கு ஒரு சம்பவம் எங்கிருந்துதான் வருதோ!!” என தெரிவித்து, “KTM RC 200 TN 10 BJ 470” என பைக் எண்ணைக் குறிப்பிட்டு, “தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது… திரும்ப கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்” பதிவிவிட்டுள்ளார். மணிமேகலையின் அந்த பதிவு இதோ…