தமிழ் தொலைக்காட்சி வரலாற்றிலேயே எந்த ஒரு சமையல் நிகழ்ச்சிக்கும் கிடைக்காத மாபெரும் வரவேற்பும் ஆதரவும் ரசிகர்கள் மத்தியில் கிடைத்தது என்றால் அது விஜய் தொலைக்காட்சியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். 

சாதாரண சமையல் நிகழ்ச்சியில் சமையல் கலைஞர்களாக செலிபிரிட்டிகளையும் அவர்களுக்கு துணையாக தொல்லை செய்யும் கோமாளிகளாக நகைச்சுவை கலைஞர்களை இறக்கி ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த நிகழ்ச்சியாக மாறியது குக் வித்து கோமாளி.

புகழ், பாலா சிவாங்கி பழைய ஜோக் தங்கதுரை மணிமேகலை, சக்தி கோமாளிகளாக பங்கு பெற்ற அனைவரும் மக்கள் மனதில் ஹீரோக்களாகி வருகிறார்கள். டிக் டாக் செயலியில் மூலமாக வீடியோக்களை செய்து சமூக வலைதளங்களில் வைரலான இளம் பிரபலம் சக்தி, குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு இன்னும் பிரபலமடைந்தார். 

இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் சக்தியை பத்து லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பின்தொடர்கிறார்கள். இந்நிலையில் தற்போது குக் வித் கோமாளி மூலம் பிரபலமான சக்தி பாடகராக மாறியுள்ளார். இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

"10 லட்சம் மக்களுக்கு மிக்க நன்றி...ஒரு சின்ன அப்டேட்... வீடியோ பாருங்க நீட் யுவர் பிலஸ்ஸிங்ஸ்" என தெரிவித்துள்ளார். மேலும் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் பாடகர்களான சிவாங்கி, ஷாம் விஷால், ஸ்ரீநிஷா, நிவாஸ், மானசி, பரத் உள்ளிட்ட பாடகர்களை குறிப்பிட்டுள்ளார். விரைவில் இந்தப் பாடல் பற்றிய மற்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by sakthi (@sakthii___)