விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் மூலம் புகழ், சிவாங்கி உள்ளிட்ட பலர் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் அனைவருமே தனியாக யூடியூப் சேனல் வைத்துள்ளார்கள். அதற்கு லட்சக்கணக்கில் பார்வையாளர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் தான் கார் வாங்கியிருப்பது குறித்த வீடியோ ஒன்றை தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார் புகழ். அதில், தான் எப்படி கார் கழுவி சம்பாதித்துக் கஷ்டப்பட்டு இந்த அளவுக்கு உயர்ந்து கார் வாங்கியுள்ளேன் என்பது குறித்து நெகிழ்ச்சியுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

தற்போது, சபாபதி எனும் படத்தில் சந்தானத்துடன் நடித்து வருகிறார் புகழ். அதன் படப்பிடிப்பில் தனது புதிய காரை சந்தானத்திடம் காட்டியுள்ளார். அந்தக் காரை ஓட்டிப் பார்த்து, புகழுக்குப் பாராட்டு தெரிவித்திருந்தார் சந்தானம். சிறிது நேரம் கழித்துப் புகழை அழைத்து, வாழ்த்துகள் புகழ். சாமி சிலை ஒன்று வாங்கியிருக்கிறேன். காரின் முன்பு ஒட்டிக்கொள். ஆடி, பி.எம்.டபிள்யூ என வாங்கினாலும் நான் வாங்கித் தர வேண்டும் உனக்கு என்று கூறியுள்ளார் சந்தானம்.

சந்தானத்தின் பரிசைப் பிரித்துப் பார்த்தபோது அதில் வெள்ளியில் பிள்ளையார் சிலை ஒன்று இருந்தது. அதைத் தனது காரில் ஒட்டிவிட்டு புகழ், சந்தானம் அண்ணனின் பரிசு. அண்ணனை எல்லாம் பார்ப்பேனா என்று தோன்றியது. இப்போது அவருடன் ஒரு படம் நடிக்கிறேன் என்று நெகிழ்ச்சியுடன் கூறியிருந்தார். 

இந்நிலையில் குழந்தையுடன் புகழ் கொஞ்சி விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், புகழின் ஹேர்ஸ்டைல் போலவே அந்த குழந்தையின் ஹேர்ஸ்டைல் உள்ளது. இதை பார்த்த நெட்டிசன்கள் வீடியோவை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.