விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வெற்றிகரமான தொடர்களில் ஒன்று குக் வித் கோமாளி.இந்த தொடரின் இரண்டாவது சீசனில் பிரபல மாடலும் நடிகையுமான பவித்ரா லக்ஷ்மி பங்கேற்று வருகிறார்.இந்த தொடரின் மூலம் பட்டிதொட்டி எங்கும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் பவித்ரா.குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் கனவுக்கன்னியாக அவதரித்தார் பவித்ரா.

இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் சில குறும்படங்கள்,ஆல்பம் பாடல்கள் போன்றவற்றில் நடித்திருந்தார் பவித்ரா.மேலும் உல்லாசம் என்ற மலையாள படத்தில் ஹீரோயினாக நடித்தும் அசத்தியுள்ளார் பவித்ரா.உங்களில் யார் பிரபுதேவா நிகழ்ச்சியிலும் இவர் பங்கேற்று அசத்தியிருந்தார்.மேலும் மிஸ் மெட்ராஸ் போன்ற சில பட்டங்களையும் வென்று அசத்தியுள்ளார் பவித்ரா.

குக் வித் கோமாளி தொடரின் மூலம் மிகவும் பிரபலமான பவித்ராவின் பேரில் பல போலி கணக்குகள் ட்விட்டர் தளத்தில் உருவாக்கி தேவையற்ற செயல்கள் செய்துவருவதாக பவித்ரா சில நாட்களுக்கு முன் வீடியோ வெளியிட்டு தெரிவித்திருந்தார்.ஆனால் அவர் வெளியிட்ட வீடீயோவையும் சிலர் அதேபோல போட்டுவிட்டனர்.

இதற்கு விளக்கமளிக்கும் வகையில் தன்னிடம் இருப்பது ஒரே ஒரு ட்விட்டர் கணக்கு தான் என்று தற்போது ஒரு புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் பவித்ரா.ரசிகர்கள் வேறு எந்த கணக்கையும் நம்பி ஏமாறவேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.