பிரபல மாடலாக இருந்து பின்னர் ஓகே கண்மணி உள்ளிட்ட சில திரைப்படங்களில் சில கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியவர் அஷ்வின் குமார்.இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரெட்டைவால் குருவி,நினைக்க தெரிந்த மனமே உள்ளிட்ட தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக மாறினார் அஷ்வின்.

சமீபத்தில் விஜய் டிவியை கலக்கி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று அசத்தினார் அஷ்வின்.இந்த தொடரின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவராக இளம் பெண்களின் மனம்கவர்ந்த கனவுகண்ணனாக உருவெடுத்தார் அஷ்வின்.இவர் குக் வித் கோமாளி சீசன் 2 போட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்து அசத்தினார்.

இவரது குட்டி பட்டாஸ் ஆல்பம் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.இதனை தொடர்ந்து இவரது கிரிமினல் க்ரஷ்,loner ஆல்பம் பாடல்களும் வெளியாகி ஹிட் அடித்தன.ஒரு படத்திலும் ஹீரோவாக நடித்து வருகிறார் அஷ்வின்.Trident ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் அஷ்வின் ஹீரோவாக நடிக்கிறார்.

இந்த படத்தின் அஸ்வினுடன் இணைந்து புகழ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.இந்த படத்தினை அறிமுக இயக்குனர் ஹரிஹரன் இயக்குகிறார்.விவேக் மெர்வின் இந்த படத்திற்கு இசையமைக்கின்றனர்.இந்த படத்திற்கு என்ன சொல்ல போகிறாய் என்று பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தின் டைட்டில் லுக் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.அஷ்வினுக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.