பிரபல மாடலாக இருந்து பின்னர் ஓகே கண்மணி உள்ளிட்ட சில திரைப்படங்களில் சில கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியவர் அஸ்வின்.இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரெட்டைவால் குருவி,நினைக்க தெரிந்த மனமே உள்ளிட்ட தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக மாறினார் அஸ்வின்.

இதனை தொடர்ந்து தற்போது விஜய் டிவியை கலக்கி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று வருகிறார்.இந்த தொடரின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவராக மாறினார் அஸ்வின்.இந்த தொடரின் மூலம் கனவுகண்ணனாக விரைவில் உருவெடுத்தார் அஸ்வின்.

குக் வித் கோமாளி தொடரில் இவருடன் ஷிவானி அடிக்கும் லூட்டிகள் சமூகவலைத்தளங்களில் செம ட்ரெண்ட் அடித்து வருகின்றன.தனது இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது போட்டோக்கள்,வீடியோக்கள் போன்றவற்றை போட்டு லைக்குகளை அள்ளி வருகிறார் அஸ்வின்.

தற்போது தனது பெயரில் சிலர் fake பக்கங்களை வைத்துக்கொண்டு பலரை ஏமாற்றுகின்றனர் என்றும் அந்த பக்கங்களை ரிப்போர்ட் செய்யவும் ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார்.சில நாட்களுக்கு முன் இந்த தொடரில் பங்கேற்று வரும் பவித்ராவும் fake பக்கங்களுக்காக ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.