குணச்சித்திர நடிகையாக அறிமுகமாகி தமிழ்,தெலுங்கில் வளர்ந்து வரும் இளம் நாயகியாக அசத்தி வருபவர் அம்மு அபிராமி.தீரன் அதிகாரம் ஒன்று,தானா சேர்ந்த கூட்டம் என முக்கிய படங்களில் நடித்த இவர் அடுத்ததாக ராட்சசன்,அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக மாறினார்.

இதனை தொடர்ந்து துப்பாக்கி முனை,தம்பி என பல படங்களில் நடித்து பிரபலமானார் அம்மு அபிராமி.இவரது நடிப்புக்கென தனியொரு ரசிகர் பட்டாளம் உருவானது.தமிழகத்தின் கனவுக்கன்னிகளில் ஒருவராக உருவெடுத்தார்.தெலுங்கிலும் ராட்சசன்,அசுரன் உள்ளிட்ட படங்களின் ரீமேக்கில் நடித்து அசத்தினார்.தென்னிந்தியாவில் பிரபலமான நடிகையாக மாறினார் அம்மு அபிராமி.

சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த யானை படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார் அம்மு அபிராமி.இதனை தவிர சமீபத்தில் நிறைவடைந்த குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் மூன்றாவது இடம்பிடித்து அசத்தினார் அம்மு அபிராமி.இந்த நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவராக மாறினார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது ரசிகர்களுடன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து வந்த அம்மு அபிராமி,பலரும் தனது திருமணம் குறித்து கேட்டுள்ளனர் அவர்களுக்கு பதிலளிப்பதற்காக ஒரு ஸ்டோரியை பகிர்ந்துள்ளார்.

தனக்கு 22 வயது தான் ஆகிறது இப்போது திருமணம் செய்துகொள்வதை விட பல கனவுகளை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆசை உள்ளது.திருமணம் செய்யவேண்டும் என்ற எண்ணம் இப்போது இல்லை எப்போது தோன்றுகிறதோ அப்போது கண்டிப்பாக திருமணம் செய்துகொள்வேன்

 

cook with comali fame actress ammu abhirami answers fans about marriage