விஜய் டிவி தமிழ் தொலைக்காட்சிகளில் மக்களின் மனம் கவர்ந்த ஒரு சேனல்.தங்களது வித்தியாசமான நிகழ்ச்சிகள் மூலமாகவும்,தொடர்கள் மூலமாகவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர்.இந்த தொலைக்காட்சியில் வேலைபார்த்த பலரும் தற்போது சினிமாவில் பிரபலன்களாக உள்ளனர்.

சிவகார்த்திகேயன்,சந்தானம் போன்ற முக்கிய நடிகர்களை உருவாக்கியது விஜய் டிவி தான்.பல துணை நடிகர்கள்,காமெடி நடிகர்கள்,இயக்குனர்கள் கதாசிரியர்கள் என்று பலரையும் அடையாளம் கண்டுள்ளது விஜய் டிவி.மேலும் கலக்கப்போவது யாரு,சூப்பர் சிங்கர் உள்ளிட்ட தொடர்களின் மூலம் தமிழகத்தில் மூலை முடுக்கில் இருக்கும் திறமைகளையும் கண்டுபிடிக்க விஜய் டிவி தவறுவதில்லை.

கடந்த வருடமும் குக் வித் கோமாளி என்ற தொடரை அறிமுகம் செய்தது விஜய் டிவி.சமையல் போட்டியில் நகைச்சுவை கலைஞர்களை இறக்கி அசத்தினர்.இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் செம பிரபலமாக இருந்தது.மேலும் இந்த தொடரில் பங்கேற்ற அனைவரும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்களாக மாறிவிட்டனர்.

குறிப்பாக புகழ்,பாலா,சிவாங்கி,மணிமேகலை,வனிதா விஜயகுமார்,ரம்யா பாண்டியன் உள்ளிட்டோர் செம பாப்புலராக இருந்து வருகின்றனர்.தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பி வருகிறது.இரண்டாவது சீசனும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சில நாட்களுக்கு முன் ஒளிபரப்பான குக் வித் கோமாளி தொடரில் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.இந்த தொடர் தனக்கு மிகவும் பிடித்த ஒரு நிகழ்ச்சி என்றும் சமையல் நிகழ்ச்சியில் காமெடி கலந்து குழுவினர் அனைவரும் அசத்தி வருவதாக அனைவரையும் பாராட்டினார்.குறிப்பாக இதுவரை யாரும் பார்த்திராத குக் வித் கோமாளி இயக்குனர் பார்த்திபனையும் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார் சிவகார்த்திகேயன்.

A post shared by Parthiv.Mani (@parthiv.mani)