மக்கள் அன்றாடம் பார்த்து மகிழும் தமிழ் சேனல்களில் ஒன்று ஜீ தமிழ்.குறுகிய காலத்தில் மக்கள் மனதில் தங்கள் வித்தியாசமான நிகழ்ச்சிகள் மூலமாகவும்,வித்தியாசமான கதைக்களம் கொண்ட சீரியல்கள் என்று மக்கள் மனதில் சிம்மாசனம் அமைத்து அமர்ந்து விட்டது ஜீ தமிழ்.அவ்வப்போது சில சீரியல்களை இணைத்து மகா சங்கமங்களை தொலைக்காட்சிகள் ஒளிபரப்புவார்கள்.

இதற்கு ஜீ தமிழும் விதிவிலக்கல்ல,அவ்வப்போது தங்கள் சூப்பர்ஹிட் தொடர்களை இணைத்து ஒளிபரப்பி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தனர்.ஜீ தமிழின் சூப்பர்ஹிட் தொடர்களில் முக்கிய தொடர்கள் யாரடி நீ மோஹினி மற்றும் கோகுலத்தில் சீதை.இந்த இரண்டு தொடர்களுக்கும் தனி தனியாக ரசிகர் பட்டாளமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

இரண்டு பெரிய தொடர்கள் இணைவதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக கதையமைத்து சீரியல் குழுவினர் சீரியலை ஒளிபரப்பி வருகின்றனர்.இந்த தொடரின் மஹாசங்கமம் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த தொடரில் தற்போது சிறப்பு தோற்றத்தில் பிரபல நடிகையும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான தீபா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி ட்ரெண்ட் அடித்து வருகிறது.